<>
Wednesday, 9 March 2011

nayanthara

nayanthara

நடிகை நயன்தாரா மீதான ஆபாச போஸ்டர் வழக்கு மீண்டும் தூசி தட்டப்படுகிறது. அஜித்  நயன்தாரா நடிப்பில் உருவான ஏகன் படம் கடந்த 2008 ம் ஆண்டு வெளியானது. கேரளாவிலும் திரையிடப்பட்ட இப்படத்தின் போஸ்டர்கள் திருவனந்தபுரம் நகரெங்கும் ஒட்டப்பட்டன. அதில் நயன்தாரா ஆபாசமாக போஸ் கொடுத்த போட்டோக்கள் இடம்பெற்றிருந்தன.
இது பொதுமக்கள் மனதை கெடுக்கும் வகையில் இருப்பதாக கூறி திருவனந்தபுரம் கோர்‌டில் நாகராஜ் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், படத்தின் டைரக்டர் ராஜுசுந்தரம், ஆபாச போஸ் கொடுத்த நடிகை நயன்தாரா, தயாரிப்பாளர், தியேட்டர் உரிமையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்
ஆனால் போலீசார் இந்த வழக்கில் ஆதாரங்கள் சரியாக கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கை முடித்து விட்டனர். இதையடுத்து முதலில் வழக்கு தொடர்ந்த நாகராஜ் மீண்டும் கோர்ட்டில் புதுவழக்கு தொடர்ந்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், புகாரை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று போலீசுக்கு உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
TOP